Sunday, January 30, 2011

அதிமுக ஆட்சி - காலத்தின் கட்டாயம்

தற்போதைய தி முக அரசின் ஐந்து வருட கால ஆட்சி முடியும் தருவாய் வந்து விட்டது. நான்கு ஆண்டு காலமாக புகழ்ச்சியைத் தவிர முதல்வர் எதையும் பெரிதாக சந்திக்க வில்லை, வேறு எதையும் விரும்பியதும் இல்லை. நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையில், வெறும்வாய்க்கு அவுல் போட்டது போல வந்தது  ஸ்பெக்டரம் ஊழல். 'தோரயமாக' என்ற ஒரு வார்த்தை தமிழில் உள்ளது. அதை வைத்து எங்கள் அரசியல் விஞ்ஞானிகள் சும்மா கில்லி மாதிரி விளையாடுகிறார்கள். அதே 'தோரயமாக' 1.67 லட்சம் கோடிகளுக்கு ‘அதிகமா’ விற்றுருக்கலாம் என்று ஒரு திரி கிள்ளிப் போடப்பட்டது. எங்க ஊர்ல கிழவிகள் வெட்டி நியாயம் பேசுவது போல கிளம்பினர் ஜெயா. யார்யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து இந்த விஷயத்தை பூதகம் ஆக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார் .

இன்று எங்கு கண்டாலும் இரண்டே விவாதங்கள் தான். "எப்பா இம்புட்டு கோடியாமே, இத வச்சுத்தான் நமக்கு ரூ. 200  தேர்தல் அப்போ குடுக்குராங்களா!" என்பது ஒன்று, மறு பக்கம் “யாரு தான்ப்பா கொள்ளை அடிக்கலை, இந்த மனுசனாட்சும் எதாச்சும் பண்றாரு". இது என்னவாக இருந்தாலும், தமிழக அரசியல் தெரிந்தவர்கள் சொல்வார்கள் : அரசியல் பகடைகள் உருட்டப்படும் போது சாதியையும் கூட்டணியும் மட்டுமே கணக்கில் வரும். எப்படி என்று கேட்பவர்களுக்கு 2001 தேர்தல் அதிமுகவின் வெற்றியே பெரிய எடுத்துகாட்டு. சரி, அது இருக்கட்டும் இப்போ தமிழகத்தில் இன்னும் மூன்று மாத காலத்தில் என்ன நடக்க வேண்டும்? இது தான் பலரும் கேட்கும் கேள்வி.

அதிமுக ஆட்சி - காலத்தின் கட்டாயம்:
திமுக வின் கிளைகள் பெருகியுள்ளன்வோ இல்லையோ திமுக தலைமையின் குடும்பம் பறந்து விரிந்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை தான். தமிழக மக்களின் ஏன் இந்திய மக்களின் தேர்தல் வாக்களிப்பு எப்போதும் ‘better of the two evils’ என்றே இருக்கும்.  தமிழகத்தில் எப்போதும் இப்படி தான் . சில நேரங்களில் தீமைகளில் வலியதே நன்மையாகக் கூடத் தெரியும். 1967 தேர்தல் இதற்கு ஒரு நல்ல உதாரணம். "காமராஜர் முதல்வராக இருந்து ஜனநாயகப் படுகொலை செய்கிறார்" என்று பரப்பினர். சொந்த விஷயத்தில் M.G.ராமச்சந்திரன
(அன்றைய சூப்பர் ஸ்டார்) கழுத்தில் சுடப்பட்டார் என்பதற்காக காங்கிரஸ் ஆட்சி குறை சொல்லப்பட்டது. அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டது.  அதற்குப்பின் நடந்த ஜனநாயக கொலைகள் எல்லாம் வரலாறு. அதே சூழ்நிலை தான் இன்று. 'தமிழகத்தை காக்க வருகிற மீட்பர் ஜெயா'  என்ற மாயையை உருவாக்குகின்றனர். நான் இந்த திமுக ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுறேன் என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். அதிமுக வின் சூழ்ச்சியையே அந்த காலத்து திமுகவின் சூழ்சிக்கு ஒப்பிடவேண்டியதாகிறது.

ஏன்? என்ன சூழ்ச்சி இருக்கிறது?? இவன் என்ன பிதற்றுகிறான் என்று நினைகிறீர்களா! சரி , சற்று பின் நோக்கி சென்று யோசிப்போம். 2009 க்கு முன்பு வரை ‘ஈழம்’ என்ற சொல்லையே வெறுத்து வந்த ஜெயலலிதா, 'பிரபாகரனை தூக்கில் போட வேண்டும்' என்பதில் இருந்து,  “ஒரு போர் (இலங்கை யுத்தம்) என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று சொல்லும் வரை எதையும் விட்டு வைத்ததில்லை. தீடீர் என்று 2009 ஜனவரி பெப்ரவரிகளில் இலங்கை தமிழர்களின் போர் வாள் (?) ஆனார் ஜெயா. இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்குக் காங்கிரஸ் தான் காரணம் என்று சூராவெளி ஆனார். பல பேர் ஜெயலலிதா 'இலங்கை தமிழர்களின் விடிவெள்ளி', 'ஈழம் வென்றெடுப்பார்', 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்றெல்லாம் கனவுக்கோட்டை கட்டினர் . முடிவு, தேர்தல் முடிந்தது; முடிவுகள் வரும் முன்னரே தன் ஆருடத்தை பயன்படுத்தி (எந்த ஜோசியர் சொன்னாரோ?) அமைய போகிற காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு என்றார் ஜெயா.  அது எப்படி? 10 நாட்களுக்கு முன்பு வரை தமிழ் இனத்தை அழித்த காங்கிரஸ், ஆட்சிக்கு வரும்போது தோழமையாகும்? இதையெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். சுயநலம், கர்வம், ஆணவம், பிராதுதனம். ரஜினி சொன்னார் போல் இதையும் தாண்டி நடக்க கூடாதது நடந்தால், தமிழ் நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.

என் இனிய தமிழ் இன மக்களுக்கு நியாபக மரதி அதிகம், கூடவே இரக்க குணமும், மீண்டும் ஒரு வாய்ப்பு என்ற பெரிய மனம் வேற. விழித்துக்கொள்ளுங்கள் மக்களே , இன்னொரு 1991-96 வேண்டாமே !!!!
‘better of the two evils’ என்ற சூத்திரத்தில் தி மு க பரவா இல்லையோ என்ற எண்ணமே தோன்றுகிறது.

-PPR

5 comments:

  1. அது எப்படிப்பா, அவங்கள (தி.மு.க) 'better'னு சொல்றிங்க? காங்கிரஸூக்கு ஆதரவு என்னும் ஒரு வார்த்தையால் மட்டுமே, ஜெ.வை எதிர்க்கலாமோ? ஜெ ஈழத்திற்கு எதிரி, ஆனால் கருணாநிதியோ துரோகி. கண்டிப்பாக மீண்டும் ஒரு 91-96 வராது. எனக்கு 2001-06 பிடித்திருந்தது. சொல்லப்போனால் 2006-10ஐ விட 2001-06 எவ்வளவோ பரவாயில்லை. அப்போது ரவுடிகள் ஆட்சி செய்யவில்லை, மந்திரிகள் சுரண்டவில்லை. So the need of the hour is A(nti)D(ravida)M(unnetra)K(izhagam)..

    ReplyDelete
  2. பிரச்னை காங்கிரஸ் ஆதரவா இல்லையா என்பதோ , ஈழத்திற்கு யார் துரோகி என்பதோ இல்லை . ஜெயா வின் சந்தர்பவாத தனம் தான் . ஆட்சி கட்டிலை பிடிக்க என்ன நாடகமும் செய்வர் அன்பு சகோதரி . 2001-06 பிடித்திருந்தது என்று நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக உள்ளது . ஏனென்றால் ஜெயா விற்கே 2001-05 வரை பிடிக்காமல் தான் போட்ட திட்டங்களை (சாதனை திட்டங்கள் : H card, மத மாற்ற தடை சட்டம் , ஆடு கோழி பலி - இவ்வளவுதான் ) என போட்ட அனைத்தையும் ரத்து செய்து ஆச்சர்யத்தை உருவாக்கினார் . 2001-06 எதையும் உருப்படியாக கிழிக்கவில்லை . புதிய வேலை வாய்ப்பு இல்லை என்பதோட இருந்த வேலையும் பறித்தது தான் மிச்சம் . ஆம் ரவுடிகள் ஆட்சி செய்ய வில்லை ராம், ஆனால் ஒரு கும்பல் மட்டும் ரௌடிகள் ஆகி ஆட்சி செய்தனரே . மணல் கொள்ளை முதல் கட்ட பஞ்சாயத்து, கந்து வட்டி வரை. அது தான் மிக பெரிய வெறுப்பே .

    ReplyDelete
  3. பிரச்னை காங்கிரஸ் ஆதரவா இல்லையா என்பதோ , ஈழத்திற்கு யார் துரோகி என்பதோ இல்லை . ஜெயா வின் சந்தர்பவாத தனம் தான் . ஆட்சி கட்டிலை பிடிக்க என்ன நாடகமும் செய்வர் அன்பு சகோதரி . 2001-06 பிடித்திருந்தது என்று நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக உள்ளது . ஏனென்றால் ஜெயா விற்கே 2001-05 வரை பிடிக்காமல் தான் போட்ட திட்டங்களை (சாதனை திட்டங்கள் : H card, மத மாற்ற தடை சட்டம் , ஆடு கோழி பலி - இவ்வளவுதான் ) என போட்ட அனைத்தையும் ரத்து செய்து ஆச்சர்யத்தை உருவாக்கினார் . 2001-06 எதையும் உருப்படியாக கிழிக்கவில்லை . புதிய வேலை வாய்ப்பு இல்லை என்பதோட இருந்த வேலையும் பறித்தது தான் மிச்சம் . ஆம் ரவுடிகள் ஆட்சி செய்ய வில்லை ராம், ஆனால் ஒரு கும்பல் மட்டும் ரௌடிகள் ஆகி ஆட்சி செய்தனரே . மணல் கொள்ளை முதல் கட்ட பஞ்சாயத்து, கந்து வட்டி வரை. அது தான் மிக பெரிய வெறுப்பே .

    ReplyDelete
  4. //ஜெயா வின் சந்தர்பவாத தனம் தான் . ஆட்சி கட்டிலை பிடிக்க என்ன நாடகமும் செய்வர் அன்பு சகோதரி . //
    நீங்கள் ஆதரிக்கும் அந்த தலைவர் சந்தர்ப்பவாதியோ, பதவிக்காக எதுவும் செய்ய துணிந்தவரோ இல்லையா?
    //2001-06 எதையும் உருப்படியாக கிழிக்கவில்லை . //
    மக்கள் நிம்மதியாக இருந்தார்கள்.
    //ஆனால் ஒரு கும்பல் மட்டும் ரௌடிகள் ஆகி ஆட்சி செய்தனரே . மணல் கொள்ளை முதல் கட்ட பஞ்சாயத்து, கந்து வட்டி வரை. அது தான் மிக பெரிய வெறுப்பே .//
    இப்போது மட்டும்? அப்போதாவது கும்பல். இப்போது ஒரு குடும்பம். according to me, the better evil is admk.. she is bold enough to do anything and can face the consequences.. not like karuna..

    ReplyDelete
  5. 2001-06 இல் போல இப்போது விவசாயிகள் எலிக்கறி சாப்பிடவில்லை; தூக்கிட்டு மாளவில்லை.. குடும்ப அரசியல பத்தி அதிமுக பேச தகுதி இல்லை.. அங்க மட்டும் என்ன வள்ளல் சசிகலா குடும்பம் ஜெயாவையே ஆட்சி செய்கிறது.. ஜெயா வந்தால் தமிழ் நாட்டை ஒரு தரப்பினருக்கு மட்டும் எழுதி வைக்க வேண்டியது தான்..

    ReplyDelete